
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள் சமீபத்தில் நடந்து முடிந்தது. 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே பொதுத் தேர்வுகள் முடிவடைந்து விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்றுடன் தேர்வுகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு சனிக்கிழமையான இன்று முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தனியார் பள்ளிகளில் ஏற்கனவே விடுமுறை தொடங்கியுள்ளது. தொடர்ந்து மே மாத விடுமுறை முடித்த பிறகு ஜூன் 1ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. வர இருக்கும் 2023-24 ஆம் கல்வி ஆண்டில் மொத்தம் 217 வேலை நாட்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.