சென்னை தீவுத்திடலில் சர்வதேச கைத்தறி, கைவினைப் பொருட்கள் மற்றும் உணவு திருவிழாவை அமைச்சருடைய உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக சென்னை விழா 2023 என்ற தலைப்பில் சர்வதேச கைத்தறி, கைவினைப் பொருட்கள் மற்றும் உணவு திருவிழா சென்னை தீவு திடலில் நேற்று தொடங்கிய வருகின்ற மே 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் 311 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் வித்யாசமான கைவினைப் பொருட்கள் மற்றும் வித்தியாசமான உணவுகள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன.

இந்த கண்காட்சியை பார்வையிட வருபவர்களுக்கு நுழைவு கட்டணமாக பத்து ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளை சேர்ந்த கைவினை கலைஞர்கள் தங்கள் பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளனர். அதன்படி பூடான், நைஜீரியா, வங்கதேசம், ஈரான், நேபாளம், இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளின் கைவினைப் பொருள்களும் இதில் இடம்பெற்றுள்ளன.