இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் பெரும்பாலான வேலைகளை வீட்டிலிருந்து கொண்டே ஆன்லைன் மூலமாக முடித்து விடுகின்றனர். அதனால் அரசு சார்பாக ஆங்காங்கே இணையதள சேவை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி மக்கள் அரசு சார்ந்த வேலைகளை அலுவலகங்களுக்கு செல்லாமல் முடித்து விடுகிறார்கள். அதன்படி தற்போது சென்னை தாம்பரம் மாநகராட்சிக்கு https://tnurbanepay.tn.gov.in என்ற புதிய இணையதள சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளம் சேவை மைய மூலமாக தாம்பரம் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் வரி, பாதாள சாக்கடை வரி மற்றும் தொழில் வரிகளை மக்கள் செலுத்தலாம். அது மட்டும் அல்லாமல் கட்டிட அனுமதி, பிறப்புச் சான்றிதழ், இறப்பு சான்றிதழ், காலி மனை வரி பெயர் மாற்றம்,கட்டிட அனுமதி போன்ற சேவைகளை பெறவும் விண்ணப்பிக்கலாம் என்று தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.