தமிழக ரேஷன் கடைகளில் இலவச அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு நிதி உதவிகளும் இதன் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். ஒரு சில நேரங்களில் ரேஷன் கடைகளில் தரம் குறைந்த பொருட்கள் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்து வருகிறது.

இந்த நிலையில்  ரேஷன் கடைகளில் தரமான பொருட்களை மட்டுமே வினியோகம் செய்ய வேண்டும் என்று கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. தரம் குறைந்த பொருட்கள் இருந்தால், அவற்றை திருப்பி அனுப்புமாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. தரம் குறைந்த பொருட்கள் எந்த சூழலிலும் கார்டுதாரர்களுக்கு வழங்கக் கூடாது. இந்த அறிவுரைகள் பின்பற்றப்படுவதை, அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.