தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் காமா ரெட்டி கூடா பகுதியில் உள்ள சுவாதி (25) என்ற இளம் பெண், மகேந்தர் ரெட்டி என்ற நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டு, குடும்பமாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

சமீபத்தில் சுவாதி கர்ப்பமாக இருந்த நிலையில், திடீரென கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த மகேந்தர் ரெட்டி, சுவாதியை கொடூரமாக  வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர், சுவாதியின் உடலை பல துண்டுகளாக வெட்டி, ஒரு பகுதியை பிளாஸ்டிக் பைகளில் சுற்றி, புறநகர் பகுதியில் உள்ள ஆற்றில் வீசினார். உடலை வெட்டும் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் சந்தேகத்துடன் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, பிளாஸ்டிக் பைகளில் மனித உடல் பாகங்கள் இருப்பதை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மகேந்தர் ரெட்டியை கைது செய்தனர். வீட்டில் இருந்த உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, ஆற்றில் வீசப்பட்டுள்ள உறுப்புகளையும் தேடிவருகின்றனர்.

மகேந்தர் ரெட்டியும் சுவாதியும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தை பெற்றுக்கொள்ள சுவாதி விரும்பிய நிலையில், மகேந்தர் ரெட்டி அதற்கு எதிராக இருந்ததாகவும், ஏற்கனவே அவரது கருவை ஒருமுறை கலைத்ததாகவும், தற்போது மீண்டும் கர்ப்பமாக இருப்பதால், அவ்வாறே கொடூரமாக  கொலை செய்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், “மனைவி காணவில்லை” என சுவாதியின் தங்கைக்கு பொய் கூறி, போலீசில் புகார் அளிக்க உள்ளதாகவும் நாடகமாட முயற்சி செய்துள்ளார். ஆனால் போலீசாரின் கூர்மையான விசாரணையில் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் அதிர்வலை எழுப்பியுள்ளது.