கலிபோர்னியாவின் மிரா மேசாவில், 26 வயதான பெட்ரோ ஒர்டேகா என அடையாளம் காணப்பட்ட ஒரு நபர், பிட் புல்ஸ் போன்ற ‘அமெரிக்கன் புல்லி’ என்று வர்ணிக்கப்படும் மூன்று நாய்களை வளர்த்துள்ளார். இந்த நாய்களை வளர்ப்பது சட்டத்திற்கு புறம்பானது. இந்நிலையில் பெட்ரோ தனது 4 வயது மகனின் கண் எதிரே தனது மூன்று வளர்ப்பு நாய்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
நாய்களிடமிருந்து பெட்ரோவை மீட்க அக்கம் பக்கத்தினர் முயற்சி செய்துள்ளனர். ஆனாலும் முடியாமல் போய் உள்ளது. இது குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்ததும் நாய்கள் தப்பியோட முயற்சித்துள்ளது.
இதைத்தொடர்ந்து பெட்ரோ மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து மூன்று நாய்களும் கருணை கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
