குழந்தைகள் காலை 11 மணிக்கு முன்பு, இரவு 11 மணிக்கு பின்பும் சினிமா பார்ப்பதால் தூக்கம் கெட்டு குழந்தைகளுக்கு உடல் நல பாதிப்பு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் சிலர் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி விஜயசன் ரெட்டி 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் காலை 11 மணிக்கு முன்பும் இரவு 11 மணிக்கு பின்பும் சினிமா காட்சிகளை பார்க்க தியேட்டருக்குள் அனுமதிக்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
