
அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் மாகாணத்தில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் சிறுவர் சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டு தகராறு முற்றிய நிலையில் 11 வயது சிறுமியான டெயிர சாமர்ஸ் மீது 12 வயது சிறுமி ஒருவர் ஆசிட் வீசி உள்ளார்.
சிறுமியின் உடலில் இருந்து புகை வந்ததைக் கண்டு பதறிய தாய் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இந்நிலையில் 12 வயது சிறுமி நீதிமன்றத்தில் ஆச்சார்படுத்தப்பட உள்ளார் என்றும் அவருக்கு ஆசிட் கொடுத்துவிட்ட தாய் தண்டனை அனுபவிப்பார் என்றும் கூறப்படுகிறது.