ஜப்பான் நாட்டில் உள்ள ஒக்கைடோ தீவில் உணவகத்துடன் இணைந்து இயங்கி வரும் லாட்ஜ் லவ் ஹோட்டல். இங்கு ஹிட்டோஷி  உரா எனும் 62 வயது நபர் பெண் ஒருவருடன் வந்துள்ளார். உணவகத்தில் உணவு அருந்திவிட்டு ஹோட்டல் அறைக்கு இருவரும் சென்றுள்ளனர். இவர்களது அறைக்கு இரவு எட்டு மணி அளவில் கருப்பு அங்கி  அணிந்த ஆண் பெண் இருவர் சென்றுள்ளனர். அதன் பிறகு இரவு 12 மணி அளவில் மூன்று பேர் கருப்பு அங்கி அணிந்து ஹோட்டல் விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் வெகு நேரமாகியும் ஹிட்டோஷி உராவின் அரை கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் ஹோட்டல் நிர்வாகத்தினர் கதவை உடைத்துக் கொண்டே உள்ளே சென்று பார்த்த போது தலை இல்லாத முண்டமாக ஹிட்டோஷி சடலம் குளியலறை தொட்டியில் கிடந்துள்ளது. இதை பார்த்து பயந்து அடித்து வெளியே ஓடி வந்த ஊழியர்களின் கண்ணில் அடுத்ததாக பட்டது மேஜையின் மேல் இருந்த ஹிட்டோஷியின் தலை தான்.

இதனால் பயந்து போன ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்தவர்கள் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் அவருடன் வந்தவர் ரூனா டாமோரா என்ற பெண் என்பதும் அவர் சைக்கோ என்பதும் தெரிய வந்தது. இவர் தனது தந்தை ஒசாமா  டாமோராவிடம் தான் மனநல சிகிச்சை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் தனது மகளின் கொலை வெறியை போக்க ஒசாமா டாமோரா மற்றும் அவரது மனைவி என மூன்று பேரும் சேர்ந்து ஹிட்டோஷி உராவை கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.