அமெரிக்காவை சேர்ந்த மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், ஐபேட், ஐபோன், ஐமேக் என பல பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறது.இந்த நிறுவனத்தின் தயாரிப்புக்கு என்றே உலகம் முழுவதும் ஏராளமான வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இந்நிலையிக்  ஆப்பிள் நிறுவன பணியாளர்களுக்காக தயாரிக்கப்பட்ட ஒரு ஜோடி ஷூ அமெரிக்காவில் நடைபெற்ற ஏலத்தில் சுமார் ரூ.41 லட்சத்திற்கு எடுக்கப்பட்டுள்ளது.

1990-களில் தயாரிக்கப்பட்ட இந்த ஷூவை, வேறு எங்கும் இனி பெற முடியாது என்பதால் வாங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற ஏலங்களில் ஆப்பிள் தயாரிப்பு அதிக விலைக்கு எடுக்கப்பட்டது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது