பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள பினன்ஹான் நகரில் பயணிகள் படகு ஒன்று தலீம்  தீவிற்கு ஏரி வழியாக சென்று கொண்டிருந்தது. அந்த படகில் 70 பயணிகள் பயணித்த நிலையில் திடீரென பலத்த காற்றுடன் கன மழை பெய்துள்ளது. இதனால் பயணிகள் அனைவரும் படகின் ஒரு ஓரத்தில் குவிந்து நின்றுள்ளனர். இதனால் ஒரு பக்கம் எடை குறைந்து மறுபக்கம் எடை அதிகரித்து தடுமாறிய படகு ஏரியில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இதில் பயணிகள் அனைவரும் ஏரியில் விழுந்து தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழு பயணிகளை மீட்கும் பணியில் மும்முறமாக இறங்கினர். ஆனால் 70 பயணிகளில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டதில் 42 பேர் மட்டுமே பயணிக்கும் படகில் 70 பேர் பயணித்ததும் பயணிகள் யாருக்கும் லைஃப் ஜாக்கெட் கொடுக்காததும் தெரியவந்துள்ளது.