கர்நாடகா மாநிலம் கல்புர்கி பகுதியில் பள்ளி மாணவ மாணவிகளை ஏற்ற பேருந்து ஒன்று வந்துள்ளது. அதில் பயணிகள் அனைவரும் ஏறிய போது ஒரு இஸ்லாமிய மாணவி மட்டும் பேருந்து ஏற்றாமல் சென்றுள்ளது. அந்த மாணவி ஏன் தன்னை ஏற்ற வில்லை என்று கேட்டதற்கு நீ இஸ்லாம் மதத்தை சார்ந்த பெண் தானே புர்கா அணிந்து விட்டு பஸ்ஸில் ஏறினால் ஏறு இல்லை என்றால் ஏற வேண்டாம் என மரியாதை இல்லாமல் பேசி உள்ளனர். இந்த சம்பவம் அந்த மாணவிக்கு மிகுந்த மன உளைச்சலை கொடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்த மாணவி பேசிய காணொளி ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. அதன்படி முதலில் நடத்துனர் மாணவியிடம் பெயரை கேட்டுள்ளார். அதன் பிறகு நீ முஸ்லிமா என கேட்டதற்கு மாணவி ஆம் என்று கூறியதுடன் முதலில் புர்கா போடு அப்புறமா பேருந்தில் ஏறு என்று சொல்லிவிட்டு அந்த மாணவியை ஏற்றாமல் சென்றுவிட்டனர். இந்த சம்பவத்துக்கு நெட்டிசன்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.