இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த கார்கில் போரில் வெற்றி பெற்றதன் 24 வது நினைவு தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையடுத்து லடாக்கில் உள்ள நினைவுச் சின்னத்தில் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியதோடு ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் நாட்டின் கௌரவத்தையும் கண்ணியத்தையும் பாதுகாக்க எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வோம் என்று கூறியதோடு எல்லை தாண்டி சென்று தாக்கவும் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் ராஜ்நாத் சிங்கின் இந்த கூற்றுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் “இந்தியாவின் இத்தகைய போர்க்குணம் மிக்க சொல்லாட்சிகள் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றதாலும் தெற்காசியாவின் அமைதியான சூழலை சீரழிப்பதில் பங்களிப்பதாலும் முடிந்த அளவிற்கு அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று இந்தியாவுக்கு நாங்கள் ஆலோசனை தெரிவிக்கிறோம்” என கூறப்பட்டுள்ளது