திருநெல்வேலி மாவட்டத்தில் ஜோராம் என்ற 20 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் தங்கி பிடெக் இறுதி ஆண்டு படித்து வரும் நிலையில் மடப்பாக்கம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். இவரது வீட்டின் அருகே ஒரு இளம் பெண்ணும் மற்றொரு வீட்டில் தங்கி இருந்தார்.

இந்நிலையில் சம்பவ நாளில் அந்த இளம் பெண் குளித்துக் கொண்டிருப்பதை பார்த்த கல்லூரி மாணவன் நைசாக அந்த பெண்ணுக்கு தெரியாமல் அதனை தன் செல் போனில் வீடியோவாக எடுக்க ஆரம்பித்தார். அப்போது அந்த கல்லூரி மாணவனின் செல்போனுக்கு ஒரு கால் வந்ததால் ரிங்டோன் சத்தம் கேட்டு அந்த இளம் பெண் திடுக்கிட்டு திரும்பி பார்த்தார்.

அப்போது ஜன்னல் வழியாக வாலிபர் தன்னை வீடியோ எடுப்பதை கவனித்த இளம்பெண் கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வாலிபரை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.