
ஈசிஆர்-ல் காரில் சென்ற இளம் பெண்களை வாலிபர்கள் மற்றொரு காரில் துரத்தி சென்றனர். வாலிபர்கள் சென்ற காரில் திமுக கட்சி கொடி இருந்தது. இது தொடர்பான வீடியோஸ் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அந்த வாலிபர்கள் சாலையின் குறுக்கே காரை நிறுத்தி இளம் பெண்களுக்கு தொந்தரவு அளித்துள்ளனர்.
அவர்கள் காரை தாக்குவது போல சென்று இளம்பெண்களை தகாத வார்த்தையால் திட்டி உள்ளனர். இந்த நிலையில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெண்களுக்கு எதிரான குற்றங்களை மேற்கொள்ள திமுக கொடி என்பது லைசென்ஸா? என கேள்வி எழுப்பி அந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.