அமைச்சர் சேகர்பாபு பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, எடப்பாடி பழனிச்சாமி போல ஊர்ந்து வந்து முதல்வர் பதவியை ஸ்டாலின் பெறவில்லை. முதல்வரின் 56 ஆண்டுகால பொது வாழ்க்கையில் பல்வேறு அடக்குமுறைகளை கடந்து இன்றைக்கு இந்த இடத்திற்கு வந்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி போல் குருட்டு அதிஷ்டத்தால் பதவியை பெறவில்லை. மேலும் 18 முறை முதல்வர் சிறை சென்றுள்ளதாக கூறிய அமைச்சர் சேகர்பாபு ஊழல் வழக்குக்காக ஒரு முறை கூட அவர் சிறைக்கு சென்றதில்லை என சுட்டிக்காட்டி உள்ளார்.
