கும்ப ராசி அன்பர்களே,

இந்த நாள் சிலர் சொல்லுகின்ற அறிவுரை உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். எது எப்படியோ நல்லது யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளுங்கள். பனிசுமை கொஞ்சம் ஏற்படும் பார்த்துக் கொள்ளுங்கள். தொழில் வியாபாரம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அனுகூலமான நல்ல சூழல் உருவாகும். செலவுகளை திட்டமிட்டு மேற்கொள்வது நல்லது. பணத் தேவைகள் கடைசி நேரத்தில் அதிகரிக்கும். எப்படியும் சமாளித்து விடுவீர்கள்.

இன்று உணவுப் பொருட்களை தரமறிந்து உண்ண பாருங்கள். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டியிருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கக்கூடும். பணவரவு சீராக இருக்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். திறமையால் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள். நினைத்த வாழ்க்கை அமையும்.

இன்று பெண்கள்  பிரச்சனைகளை துல்லியமாக ஆராய்ந்து செயல்படுவீர்கள். முன்கோபம் பட வேண்டாம். மன அழுத்தம் சரியாகிவிடும். இன்று மாணவர்கள் பெரியவர்களின் சொல்லுக்கு மதிப்பு கொடுத்து பெற்றோரின் பேச்சைக் கேட்டு நடந்து பாருங்கள். கல்வியில் கண்டிப்பாக ஜெயிக்க முடியும். உயர்கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். மூடநம்பிக்கைகளில் மட்டும் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டாம். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  வடக்கு

அதிர்ஷ்ட எண்  :  இரண்டு, ஐந்து மற்றும் ஏழு

அதிஷ்ட நிறம்  :  மஞ்சள் மற்றும் நீல நிறம்