மகர ராசி அன்பர்களே,

இன்று இஷ்ட தெய்வத்தின் அருள் உங்களுக்கு துணையாக இருக்கும். கடந்து வந்த பாதையில் இருந்த சிக்கல் தீர்ந்துவிடும். கடனில் ஒரு பகுதி அடைபடும். எதிர்பார்ப்புகள் ஓரளவுக்கு பூர்த்தி ஆகும். மனதில் இருந்த கவலைகள் விலகும். நம்பிக்கையுடன் எதிலும் செயல்படுவீர்கள். தொழில் வளர்ச்சிக்காக கடினமாக உழைப்பீர்கள். செய்யும் பணியில் உங்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். பணவரவில் திருப்திகரமான முன்னேற்றம் இருக்கும்.

இன்று நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறவுகள் பலப்படும். கணவன் மனைவியிடையே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. இஷ்ட தெய்வம் அருள் துணையாக இருக்கும். நல்ல நண்பர்களின் சேர்க்கை இருப்பதால் பெரிய பிரச்சனைகள் இல்லை. முடிந்தால் குலதெய்வ கோவிலுக்கு சென்று வர பாருங்கள்.

இன்று  பெண்கள்  முன் யோசனையுடன் செயல்படுவது நல்லது. உற்சாகமாக பணிகளை முடிப்பீர்கள். பணியிடத்தில் கூட நல்ல பெயர் பெறுவீர்கள். இன்று மாணவர்கள் தெளிவான சிந்தனையை ஏற்படுத்திக் கொள்வீர்கள். புதுப்புது விஷயங்களை கற்றுக்கொள்வீர்கள். எதிலும் குழப்பம் அடைய வேண்டாம். நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.   இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  வடக்கு

அதிர்ஷ்ட எண்  :  ஆறு, ஏழு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்  :  வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்