தனுசு ராசி அன்பர்களே,

இன்று முதல் நீங்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் சில பணிகளை நீங்கள் முன்னதாகவே தீர்மானிக்க வேண்டும். சிலர் உங்களிடம் எதிர்பார்ப்புடன் அணுகுவார்கள். பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். முன் யோசனையுடன் எதிலும் ஈடுபட பாருங்கள். பணத்தை பத்திரப்படுத்திக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு தேவை. பயன் தராத பொருட்களை விலை கொடுத்து வாங்க வேண்டாம்.

சூழ்நிலை புரிந்து கொண்டு  நடப்பதன் மூலம் காரிய வெற்றி அடைய முடியும். எதற்கும் அஞ்ச வேண்டாம். முடிவுகளை தெளிவாக எடுக்க பாருங்கள். முன்னேற்றத்திற்காக கூடுதல் உழைப்பு தேவை. கவன சிதறல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த நாள் உங்களுக்கு மனமகிழ்ச்சி அதிகரிக்கும் நாள் என்று சொல்லலாம். பெண்களுக்கு இஷ்ட தெய்வத்தின் அருள் துணையாக இருக்கும். தைரியமாக பணிகளை மேற்கொள்வீர்கள்.

இன்று சிந்தித்து எடுக்கும் முடிவுகளால் வெற்றி கிடைக்கும். அக்கம் பக்கத்தினரிடம்  அளவாக பேசுங்கள். இன்று மாணவர்கள் எதையும் தனித்து செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். குழப்பங்கள் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  தெற்கு

அதிஷ்ட எண்  :  இரண்டு, ஆறு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்  :  வெள்ளை மற்றும் நீல நிறம்