தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் அவர்கள் மிகக் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு மீண்டும் வெற்றிக் கனியைப் பறித்துள்ளார்.
ஆரம்பம் முதலே திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில், ஒவ்வொரு சுற்றிலும் வாக்குகள் முன்னும் பின்னுமாக மாறி மாரத்தான் ஓட்டம் போல விறுவிறுப்பாக நகர்ந்தது.
இறுதியில், திமுக வேட்பாளர் மகேஷை வீழ்த்தி தளவாய் சுந்தரம் தனது வெற்றியை உறுதி செய்தார். குறிப்பாக, இந்தத் தொகுதியில் முதல்முறையாகக் களம் கண்ட விஜய்யின் தவெக வேட்பாளரும் கணிசமான வாக்குகளைப் பெற்று கடும் சவால் அளித்த நிலையில், தனது அரசியல் அனுபவத்தால் தொகுதியைத் தக்கவைத்து மீண்டும் எம்.எல்.ஏ-வாகச் சட்டமன்றத்திற்குச் செல்கிறார் தளவாய் சுந்தரம்.
