உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. அந்தவகையில் தற்போது குப்பையை நாய் இழுத்து செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நாய்கள் எவ்வளவு விசுவாசமான நன்றியுள்ள விலங்கு என்பதை நாம் அனைவரும் அறிவோம். சமீபத்தில், குப்பை சேகரிப்பவருக்கு நாய் ஒன்று உதவி செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில் ஒரு பெண் குப்பைகள் நிறைந்த பையை எடுத்துக்கொண்டு சாலையில் நடந்து செல்வதைக் காணலாம். ஒரு நாய் அவளைப் பின் தொடர்ந்தப்படி குப்பைப் பையை இழுத்துச் செல்கிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து அந்த நாயின் நல்ல குணத்தை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.