உத்தரபிரதேச (Uttar Pradesh) மாநிலம் முசாபர்நகரில் போலீசாருக்கும் பிரபல ரவுடிக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது, காலில் குண்டு பாய்ந்து கீழே விழுந்த பிறகும் ரவுடி ஒருவன் செய்த விசித்திரமான காரியம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
முசாபர்நகரின் ராம்ராஜ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜமால்பூர் கால்வாய் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை நிறுத்த முயன்றபோது, அவன் போலீசாரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியோட முயன்றுள்ளான்.
“साहब, बड़ी गोल्ड फ्लैक दे दो”
◆ एनकाउंटर के दौरान पैर में गोली खाने के बाद बदमाश ने पुलिस से कहा
◆ मुजफ्फरनगर में पुलिस ने एनकाउंटर में एक हिस्ट्रीशीटर को गिरफ़्तार किया
◆ एनकाउंटर के दौरान जमीन पर पड़े-पड़े ही उसने पुलिसवालों से सिगरेट की डिमांड कर दी#Muzaffarnagar |… pic.twitter.com/MNtJXPGrDb
— News24 (@news24tvchannel) June 1, 2026
உடனே போலீசார் தற்காப்பிற்காகத் திருப்பிச் சுட்டதில், ஒரு தோட்டா அந்த ரவுடியின் வலது காலில் பாய்ந்தது; இதனால் அவன் நிலைதடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தான். போலீசார் அவனைச் சுற்றிலும் வளைத்த போது, பொதுவாகக் குண்டு அடிபட்டவர்கள் வலியால் கத்துவதற்குப் பதிலாக, அவன் மிகவும் கூலாக “சார், மூட் அவுட்டா இருக்கு.. ஒரு பெரிய கோல்டு பிளாக் சிகரெட் கொடுங்க” என்று போலீசாரிடமே சிகரெட் கேட்டு அடம் பிடித்துள்ளான்.
துப்பாக்கிச் சூடு நடந்த பதற்றமான சூழலிலும் அந்த ரவுடி கேட்ட இந்த விசித்திரமான கோரிக்கையைக் கேட்டு அங்கிருந்த போலீசார் தங்களது சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துள்ளனர். பிடிபட்ட அந்த ரவுடி மீராப்பூர் பகுதியைச் சேர்ந்த முகமது இனாம் என்பதும், அவன் மீது கொள்ளை, திருட்டு உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள ஒரு பிரபல ஹிஸ்டரிஷீட்டர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்பொழுது காயமடைந்த அவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், என்கவுண்டர் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட இந்த சுவாரஸ்யமான வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் படுவேகமாகப் பரவி இணையம் எங்கும் செம வைரலாகி வருகிறது.
