குட் நைட் படத்தின் வெற்றிக்கு பிறகு பிரபல நடிகர் மணிகண்டன் மீது திரைத்துறை அதிக கவனம் ஈர்த்து வருகின்றது. தற்போது மணிகண்டன் தேர்ந்தெடுத்து பல கதைகளில் நடித்து வருகின்றார். இந்நிலையில் சென்னையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது நடிகர் மணிகண்டன் இடம் ஏன் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த மணிகண்டன், கல்யாணத்திற்கு தயாராக இருக்கிறோமா இல்லையா என்பது எனக்கு தெரிய வேண்டும். அதற்கு ரெடியான பிறகு முடிவு எடுப்பது சரியாக இருக்கும். மற்றவர்கள் நம்மை கேள்வி கேட்கிறார்கள் என்பதற்காக எல்லாம் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.