டெல்லியில் நேற்று 53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு நிதி மந்திரி உட்பட அனைத்து மாநிலங்களின் நிதி மந்திரி மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தின் போது நிர்மலா சீதாராமன் பேசியதாவது, மாணவர்கள் கல்வி நிறுவனங்களுக்கு இடையே விடுதியில் தங்கினால் அவர்களுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
அதன் பிறகு மாணவர்கள் 90 நாட்கள் தங்க வேண்டும். அவர்களிடம் மாத வாடகையாக ரூ.20,000-ம் மேல் வாங்க கூடாது. இரும்பு, எஃகு, அலுமினியம் மற்றும் பால் கேன்கள் உள்ளிட்ட ஒரே வகையான பொருட்கள் மற்றும் அட்டைப் பெட்டிகள் போன்றவைகளுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். மேலும் ரயில் நிலையங்களில் பயணிகள் ஓய்வெடுக்கும் அறை, பொருட்கள் வைக்கும் அறை, பயணிகள் பயன்படுத்தும் மின்சார வாகன சேவை, பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் போன்றவைகளுக்கு ஜிஎஸ்டி வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று கூறினார்.
