சென்னை போன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையனது பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. அதன்படி சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை தினசரி 3.25 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். தற்போது 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் பயணிகளின் வசதிக்காக ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளதால் நாளுக்கு நாள் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் வார இறுதி நாட்களை முன்னிட்டு மெட்ரோ ரயில்வே நிர்வாகம் ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வார இறுதி நாட்களை முன்னிட்டு ஒரு நாள் சுற்றுலா அட்டை வழங்கப்பட இருக்கிறது. அதன்படி ரூ.100 கட்டணமாக செலுத்தி சுற்றுலா அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் மூலம் ஒரு நாளில் அளவற்ற பயணங்களை மேற்கொள்ளலாம். மேலும் பயணிகள் ரூ.150 கட்டணமாக செலுத்தி சுற்றுலா அட்டையை முதலில் பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு 100 ரூபாய் மட்டும் கட்டணம் எடுத்துக்கொள்ளப்படும். இதைத்தொடர்ந்து அட்டையை திருப்பிக் கொடுக்கும் போது ரூ.50 பயணிகளுக்கு திரும்ப கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.