
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டான் வெங்கடாசலபுரம் தெற்கு தெருவில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சண்முக லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. சம்பவம் நடைபெற்ற அன்று வடிவேல் தனது மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். மேலும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சண்முக லட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வடிவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.