பிரதமர் நரேந்திர மோடி தெலுங்கானாவுக்கு இன்று சென்றிருந்தார். அங்கு செகந்திராபாத்-திருப்பதி இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். அதன் பிறகு 11,360 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைப்பதாக இருந்தது. அதன்படி பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, மத்திய அரசின் திட்டங்களுக்கு தெலுங்கானா அரசு ஒத்துழைப்பு தராதது வேதனை அளிக்கிறது.

தெலுங்கானா மக்களுக்கான வளர்ச்சியை தடுக்க வேண்டாம் என மாநில அரசை நான் கேட்டுக்கொள்கிறேன். குடும்ப அரசியலும் ஊழலும் வேறு வேறு இல்லை. குடும்ப அரசியல் இருக்கும் இடத்தில் தான் ஊழல் பெருகும் என்று கூறினார். மேலும் தமிழகத்தில் வாரிசு அரசியல் நடந்து வருவதாக ஏற்கனவே அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் தற்போது குடும்ப அரசியல் நடந்து வரும் இடத்தில் தான் ஊழல் பெருகும் என பிரதமர் மோடி கூறியது மறைமுகமாக திமுகவை சாடி பேசியதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.