பிரதமர் நரேந்திர மோடி இன்று தெலுங்கானா மாநிலத்திற்கு ரூ. 11,360 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்றிருந்தார். முதலில் செகந்திராபாத்- திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து பொது நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அவர் பேசியதாவது, தெலுங்கானா மக்களுக்கான வளர்ச்சி பணிகளை மாநில அரசு தடுப்பது வேதனை அளிக்கிறது.

ஒன்றிய அரசு செயல்படுத்த நினைக்கும் திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு தரவில்லை. தெலுங்கானா மக்களுக்கான வளர்ச்சியை மாநில அரசு தடுக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் என்றார். அதன் பிறகு அவர்களுக்கும் நாட்டின் நலனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்கள் தங்களுடைய குடும்பம் செழிப்பதை மட்டுமே பார்க்க விரும்புகிறார்கள். எனவே தெலுங்கானா மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியை விமர்சித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் கே. சந்திரசேகர ராவ் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.