இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு வீடியோ, தற்போதைய அரசை கடுமையாக விமர்சிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், பேருந்தின் இறக்கையில் ஒரு நபர் அமர்ந்திருக்கிறார். அருகிலுள்ள இருக்கை காலியானதும், அவர் அருகில் நின்றவரை அமர விடாமல், வேறொருவரை அழைத்து அமர வைக்கிறார். அதேபோல், இன்னொரு இருக்கை காலியானதும் மீண்டும் அருகில் உள்ளவரை இடமளிக்காமல், வேறொருவரை அழைத்து அமர வைக்கிறார். இதனால் கோபமடைந்த நின்ற நபர், “நான் இவ்வளவு நேரம் நின்று கொண்டிருக்கிறேன், யாரையோ யாரையோ அமர வைக்கிறாய்” என்று கேட்கிறார்.

அந்த அமர்ந்த நபர், “யாரையோ இல்லை, எல்லோரும் என் குடும்பத்தினர்” என்று பதிலளிக்கிறார். அதற்கு நின்ற நபர், “உங்கள் குடும்பத்தினர் மட்டும் உட்காருவதற்கு இது உங்கள் வீடா?” என்று கேட்கிறார். உடனே அந்த நபர், நின்றவரின் மொபைலை எடுத்து அதில் இருக்கும் ஸ்டாலின் படத்தைக் காட்டி, “இதை உங்கள் மேல் இடத்திலும் கேளுங்கள்” என்று சொல்லுகிறார். அடுத்து, வீடியோவில் ஒரு திமுக காலண்டரை காட்டி, கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஆகியோரின் படங்களைக் குறிப்பிட்டு, “எது எப்போது எங்கு வரும்” என்று வேடிக்கையாகக் கூறுகிறது. இந்த வீடியோ இப்போது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.