
திருச்சிராப்பள்ளி மாவட்டம் வையம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட் ராஜ். இவர் தனது மகளை அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் இருந்து அழைத்துச் செல்வதற்காக சென்றுள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த வின்சென்ட் ராஜ் அதே பள்ளியில் பயின்று வந்த எட்டு வயது சிறுவனை தாக்கியதோடு கடுமையாக பேசியுள்ளார்.
Watch: Drunk man abuses, kicks minor at a government school in Tamil Nadu's Tiruchirappalli.
The man, now arrested, was identified as the father of another student studying at the school. #Viral #ViralVideo #TamilNadu pic.twitter.com/nKF3Uv5aTm
— Vani Mehrotra (@vani_mehrotra) October 19, 2023
இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் சிறுவனின் தந்தை அற்புதராஜ் வையம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடு்த்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வின்சென்ட் ராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.