தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்வைத்த கருத்து பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. “மது அருந்தும் குடிகாரர்களின் வாக்கு எனக்குத் தேவையில்லை, நல்ல குடிமக்களின் வாக்கு மட்டுமே போதும்” என்று சீமான் பகிரங்கமாகப் பேசியுள்ளார்.
மதுக்கடைகள் மூலம் கிடைக்கும் 50,000 கோடி ரூபாய் வருமானத்தை வைத்துக்கொண்டுதான் திமுக அரசு நிர்வாகத்தை நடத்தி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், மதுப் பழக்கம் தமிழக மக்களின் உழைக்கும் திறனை ஒட்டுமொத்தமாகச் சிதைத்துவிட்டதாகக் கொதித்துள்ளார்.
மேலும், “திமுகவைப் போல திருட்டு நிதியில் நான் கட்சி நடத்தவில்லை, மக்களிடம் திரட்டிய நிதியைக் கொண்டே கட்சியை நடத்தி வருகிறேன்” என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். டாஸ்மாக் வருமானத்தில் இயங்கும் அரசு, மக்களிடம் உழைக்கும் திறனைப் பறித்துவிட்டு அவர்களை அடிமையாக்கி வருவதாக சீமான் முன்வைத்துள்ள இந்தக் கருத்து, அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடிகாரர்களின் ஓட்டு வேண்டாம் என்ற சீமானின் இந்த அரசியல் துணிச்சல், எதிர்க்கட்சிகளை மிரள வைத்துள்ளதோடு, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
