சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இன்று முதல் சலுகை பயணச்சீட்டு விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. கேளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பாக வழங்கப்படும் மாதாந்திர சலுகை பயணச்சீட்டு விற்பனை தொடங்கப்படுகின்றது. விருப்பம் போல பயணிக்கும் ஆயிரம் ரூபாய் பயண அட்டை மற்றும் மாதாந்திர பயண சலுகை அட்டையை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம் எனவும் 50 சதவீதம் மாணவர் சலுகை பயண அட்டையும் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண அட்டையும் 10 எண்ணிக்கை கொண்ட டோக்கன் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.