SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், நம்முடைய வேட்பாளர் வெற்றி பெற்று…. நம்முடைய கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்று…..  நாடாளுமன்றத்திலே மக்களுடைய பிரச்சினையை எழுப்புவார்கள். தமிழ்நாட்டு மக்கள் அவர்கள் வளம் பெற வேண்டும் என்றால், அதற்க்கு  தேவையான நிறைய பெறுவதற்கு நாங்கள் போராடுவோம்.

நாடாளுமன்றத்தில் தமிழகத்திற்கு புதிய புதிய திட்டங்களை கொண்டு வருவதற்கு கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து,  நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம். தமிழ்நாடு தான் நமக்கு தாய் நாடாக விளங்கிக் கொண்டிருக்கிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரை தமிழ்நாடு வளம் பெற வேண்டும், தமிழ்நாடு வளர்ச்சி பெற வேண்டும், தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உருவாக்க வேண்டும்.

அது பொன்மனச் செல்வன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்,  இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா இரு பெரும்  தலைவர்கள் தனது வாழ்நாளில்  சாதித்துக் காட்டினார்கள். அதை  தொடர்ந்து அம்மாவுடைய அரசும் சாதித்து காட்டியது. இடையில் வந்த அரசாங்கம் இன்றைக்கு சீரழித்து விட்டது. அதை  சீர் செய்ய வருகின்ற தேர்தலிலே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை சிறுபான்மை மக்கள் ஆதரிக்க வேண்டும்.

இங்கே இருக்கின்ற  தலைவர்களின் துணையோடு நாமும் இணைந்து பணியாற்றி,  சிறுபான்மை மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழகத்திலும் சரி,  இந்தியாவிலும் சரி சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படும் பொழுது….நாம்  ஒன்றாக சேர்ந்து நாடாளுமன்றத்திலே குரல் கொடுப்போம்.  வெற்றி பெறுவோம். இந்த மண்ணிலே பிறந்த எந்த ஒரு சிறுபான்மை மக்களும் பாதிக்கப்படக்கூடாது. அதற்கு கண் இமைக்காப்பது போல அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உங்களை பாதுகாக்கும்,  பாதுகாக்கும் என பேசி முடித்தார்.