தமிழகத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு பழைய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்பட்ட புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அந்த அறிவிப்பின்படி 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவரும் புதிய பென்ஷன் திட்டத்தின் பலன்களை மட்டுமே பெற முடியும் என அரசு தெரிவித்தது. இது தொடர்பாக அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வரும் நிலையில் பல போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு அறிக்கையில் தேர்வு செய்யப்படும் அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் கிடையாது எனவும் ஊழியர்களுக்கு பங்களிப்புடன் கூடிய புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படும் எனவும் அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. எனவே இதன் மூலம் அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை இனி நிறைவேற்ற வாய்ப்புகள் இல்லை என்று தெரிகிறது. இந்த செய்தி அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.