டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு தொடர்பான முதன்மை திசை சுற்றறிக்கையை RBI வங்கி வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு செலுத்த வேண்டிய மொத்த தொகை அவர்களின் பில்லிங் சுழற்சி முடியும் வரை பயன்படுத்திய இறுதி தொகையாக இருக்கும் . திரும்பப்பெறும் தொகை மற்றும் தலைகீழ் பரிவர்த்தனைகள் இதில் கணக்கிடப்படாது. குறிப்பிட்ட தேதிக்குள் பில் செலுத்த விட்டால் கிரெடிட் கார்டு வழங்குபவர் நிலுவைத் தொகைக்கு மட்டும் வட்டி வசூலிப்பார்.

குறிப்பிட்ட தேதிக்குள் பில் செலுத்தப்படாவிட்டால், கிரெடிட் கார்டு வழங்குபவர் நிலுவைத் தொகைக்கு மட்டும் வட்டி வசூலிப்பார். வாடிக்கையாளரின் ரீஃபண்ட், ரிவர்சர் பேமெண்ட்கள் மற்றும் பகுதியளவு பணம் செலுத்திய பிறகு மீதமுள்ள பில்லின் நிலுவைத் தொகையே நிலுவையில் இருக்கும். வங்கி அல்லது NBCF நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டை தடுப்பது, செயல் இழக்க செய்வது அல்லது இடைநிறுத்துவது வெகுமதிகளை திரும்ப பெறுவது என்றால் அது வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாகவும் அஞ்சல் மூலமாகவோ காரணத்தை சொல்ல வேண்டும்.