நேற்று முன்தினம் ஜிவி பிரகாஷின் டுவிட்டர் தளத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் கேதார் ஜாதவ்வை டிரோல் செய்யும் விதத்தில் ஒரு பதிவு போட்டிருந்தார். அதாவது, “உலகத்தில் சிறந்த பினிஷர் கேதார் ஜாதவ் ஆவார். குறிப்பாக அந்த பீல்டர்ஸ எண்ணி பார்த்து அடிக்குற ஸ்டைல் வேற லெவல். CSK அணிக்கான எஞ்சியுள்ள தொடர்களில் அவரை கேப்டனாக பார்க்க ஆவலுடன் உள்ளோம்.

அதோடு இது பற்றிய தகவலுக்கு நாளை 5 மணிக்கு ஜெயம் ரவியின் டுவிட்டர் பதிவைப் பார்க்கவும்” என குறிப்பிட்டிருந்தார். இதனிடையே கேதார் ஜாதவ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி உள்ளார். இப்படி தங்களது திரைப்படத்தின் புரமோஷனுக்கு பயன்படுத்துவதா என எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அப்பதிவை ஜிவி பிரகாஷ் டெலிட் செய்துவிட்டார். ஜிவி பிரகாஷ் அடுத்து நடிக்கும் அடியே எனும் திரைப்படத்தின் மோஷர் போஸ்டர் வெளியீட்டிற்காக அப்படி செய்து உள்ளனர். அதுமட்டுமின்றி அந்த மோஷன் போஸ்டரில் சில நடிகர்களையும் கேலி செய்துள்ளனர்.