ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நாளை (செப்டம்பர் 9) தொடங்க உள்ளது. தொடர் ஆரம்ப போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் செப்டம்பர் 10-ஆம் தேதி UAE அணிக்கு எதிராக களமிறங்குகிறது. இந்த தொடர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இப்போட்டிகள் அனைத்தும் Sony Sports 1, Sony Sports 3, Sony Sports 4, Sony Sports 5 என்ற தொலைக்காட்சி சேனல்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளன. அதே நேரத்தில் Sony Liv மற்றும் Hotstar ஆப்பிலும் நேரடியாக பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து போட்டிகளும் இரவு 8 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் இந்த தகவலால் உற்சாகத்தில் உள்ளனர்.

“>