நம் இந்திய நாட்டில் 6.4 லட்சம் கிராமங்களுக்கு இன்டர்நெட் சேவையை விரிவுபடுத்தும் வகையில் பாரத் நெட் திட்டத்தில் 1.39 லட்சம் கோடி செலவிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது . அதனைத் தொடர்ந்து இந்த 1.39 லட்சம் கோடி தொகைக்கு மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது 1.94 லட்சம் கிராமங்களில் இந்த திட்டம் முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள கிராமங்களுக்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் முடிக்கப்பட உள்ளதாகவும் மேலும் அறுபதாயிரம் கிராமங்களில் இந்த முயற்சி வெற்றி அடைந்துள்ளது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது