நாட்டில் உள்ள 508 ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகளுக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். இந்த  நிகழ்ச்சியில் பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் , ரயில் பயண டிக்கெட் கட்டணம் உயரும் என யூகங்கள் எழுந்துள்ளன. ஆனால், ரயில் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை எனதெரிவித்துள்ளார். ”சாமானியர்களுக்கு சுமை இல்லாமல் உலகத்தரம் வாய்ந்த நிலையங்களை உருவாக்கி வருகிறோம்.

கட்டணத்தை உயர்த்த மாட்டோம்,” என்றார்.  நடப்பு பட்ஜெட்டில் ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என்றார். ஆயுதபூஜை, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை கால பயணங்களுக்காக மக்கள் ரயில்களை அதிகளவில் நாடியுள்ளனர்.