இன்றைய டிஜிட்டல் உலகில் எதை நம்புவது, எதை விடுவது என்றே தெரியவில்லை. இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு அழகான குழந்தை காபி ஷாப் (Cafe) ஒன்றிற்குள் நின்றுகொண்டு, பெரியவர்களை மிஞ்சும் அளவிற்கு செம ஸ்டைலாக டான்ஸ் ஆடுகிறது. அந்த குழந்தையின் முகபாவனைகளும், துல்லியமான காலடிகளும் பார்ப்பவர்களைச் சுண்டி இழுக்கிறது.

“ஒருவழியாக டான்ஸ் கிளாஸ் கைகொடுத்துவிட்டது” என்ற வாசகத்துடன் பகிரப்பட்ட இந்த வீடியோவை முதலில் பார்த்த பலரும், “என்னது, இவ்வளவு சின்ன பாப்பா இவ்வளவு சூப்பரா ஆடுதா?” என்று ஆச்சரியப்பட்டனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sara Hinckley – south orange county hairstylist (@sarisolstice)

ஆனால், உற்றுப் பார்த்தால் தான் தெரிகிறது இது மனிதக் குழந்தையே இல்லை, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட ஒரு ‘டிஜிட்டல் குழந்தை’ என்று! ஒரு பக்கம் “பார்க்க ரொம்ப க்யூட்டா இருக்கு” என்று நெட்டிசன்கள் ரசித்தாலும், இன்னொரு பக்கம் “இது என்னவோ பயமா இருக்கே.. ஏஐ எங்கே போய் முடியப்போகுதோ?” என்று கவலைப்படவும் செய்துள்ளனர். “இந்தக் குழந்தை என்னை விடச் சூப்பராக ஆடுகிறது” என்று நெட்டிசன்கள் ஜாலியாக கமெண்ட் அடித்து வரும் இந்த வீடியோ இப்போது இணையத்தில் செம ட்ரெண்டிங்.