சிகரெட் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதிலிருந்து விடுபடுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால், கன்டென்ட் கிரியேட்டரான சிருஷ்டி தெஹ்ரி (Srishti Tehri) என்பவர், 9 ஆண்டுகால புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஒரே முடிவில் தூக்கியெறிந்து இப்போது புது மனுஷியாக மாறியுள்ளார்.

ஜூன் 6-ம் தேதி, “உடல்நிலை மோசமாகும் வரை நாம் ஏன் காத்திருக்க வேண்டும்?” என்ற ஒரு சுய சிந்தனை அவருக்குள் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Srishti Tehri (@srish_teee)

புகைப்பிடிப்பதை நிறுத்தி 6 மாதங்கள் கடந்த நிலையில், அவர் அடைந்துள்ள மாற்றங்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. “என் நுரையீரல் முன்பை விடச் சுத்தமாக இருப்பதை உணர முடிகிறது.

சருமம் (Skin) மற்றும் தலைமுடி முன்பை விட ஆரோக்கியமாகிவிட்டது; இப்போது என் முகம் பொலிவுடன் காணப்படுகிறது. பீரியட்ஸ் சுழற்சி சீராகியுள்ளது.

எல்லாவற்றையும் விட முக்கியமாக, எதற்கெடுத்தாலும் சிகரெட் வேண்டும் என்ற பதற்றம் இப்போது இல்லை” என அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

“சிகரெட்டை ஒரு பெரிய சுமையைப் போல இத்தனை காலம் சுமந்திருக்கிறேன், இப்போது தான் நான் உண்மையான சுதந்திரத்தை உணர்கிறேன்” என அவர் கூறியுள்ளது பலருக்கும் உத்வேகத்தை அளித்துள்ளது.