பொதுவாக சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்வது அல்லது பயமுறுத்துவது போன்ற ‘பிராங்க்’ வீடியோக்களைப் பார்த்திருப்போம். ஆனால், இங்கொரு நபர் தண்ணீரிலேயே அதிகாரம் செய்யும் முதலைகளிடமே தனது கைவரிசையைக் காட்டியுள்ளார்.

வைரலாகி வரும் அந்த வீடியோவில், கரையில் மான் மேய்ந்து கொண்டிருப்பது போலத் தெரிகிறது. அதைப் பார்த்த ஒரு முதலை, அது உண்மையான விலங்கு என்று நம்பி அதை வேட்டையாட மெதுவாக நகர்ந்து வருகிறது.

அருகே வந்தவுடன் மின்னல் வேகத்தில் அந்த விலங்கு மீது பாய்ந்து கடிக்கிறது. ஆனால், கடித்த பிறகுதான் தெரிகிறது அது ஒரு விலங்கு அல்ல, அது ஒரு விலங்கு போன்ற பொம்மை அல்லது படம் (Prop) என்று! தன் வாயில் சிக்கியது வெறும் காகிதமும் பிளாஸ்டிக்கும் தான் என்பதை உணர்ந்த அந்த முதலை, ஒன்றும் புரியாமல் திகைத்து நிற்கும் காட்சி பார்ப்பவர்களைச் சிரிக்க வைத்துள்ளது.