கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேசிகம்பட்டி பகுதியில் மல்லிகா என்பவர் வசித்து வருகிறார். இவர் இணையதளம் மூலம் பொருட்களை வாங்கி வந்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மல்லிகாவிற்கு ஒரு தபால் வந்தது. அதில் தனியார் நிறுவனம் மூலம் கார்டு கூப்பன் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கிப்ட் வவுச்சர் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்ததால் மல்லிகா அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது மறுமுனையில் பேசிய நபர் நீங்கள் 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்திற்கு பொருட்களை வாங்க நடைமுறை செலவுகளுக்கான பணத்தை கட்ட வேண்டும் என கூறியுள்ளார். இதனை நம்பி பல்வேறு தவறுகளாக மல்லிகா அந்த நபர் கூறிய வங்கி கணக்கிருக்கு 5 லட்சத்து 22 ஆயிரம் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகு அந்த நபர் மல்லிகாவுடன் பேசுவதை தவிர்த்து விட்டார். இதனால் தன்னை மாற்றப்பட்டதை உணர்ந்த மல்லிகா கிருஷ்ணகிரி சைபர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.