ராஜஸ்தான் மாநிலம் பீவார் மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தாய் தனது ஐந்து குழந்தைகளுடன் கிணற்றில் குதித்ததில், ஒரு வயது இரட்டை குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராய்ப்பூர் மார்வார் பகுதியில் உள்ள ஜூதா கிராமத்தைச் சேர்ந்த சுமித்ரா (30) என்பவருக்கும், அவரது நாத்தனாருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சுமித்ரா தனது ஐந்து குழந்தைகளையும் அழைத்துச் சென்று அருகில் இருந்த கிணற்றில் குதித்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டு சுமித்ராவையும் மூன்று குழந்தைகளையும் உயிருடன் மீட்டனர்; எனினும், பிரேம் மற்றும் நரு என்ற ஒரு வயது இரட்டை குழந்தைகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த தாய் மற்றும் மூன்று குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.