ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது, புர்கான் பட் என்ற வீரர் தனது ஹெல்மெட்டில் பாலஸ்தீனக் கொடியை ஒட்டி விளையாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
‘ஜம்மு காஷ்மீர் சாம்பியன்ஸ் லீக்’ தொடரில் நடைபெற்ற இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, பல்வேறு தரப்பினரிடையே விவாதங்களை உருவாக்கியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ள போலீசார், கிரிக்கெட் வீரர் புர்கான் பட்-க்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர்.
அவருடன் சேர்த்து, போட்டி ஏற்பாட்டாளர் ஜாஹித் பட் மற்றும் மைதான உரிமையாளர் ஆகியோரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
