விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் குடும்ப தலைவியாக இருந்து அனைத்து சிரமங்களையும் தனியாலாக நின்று சந்தித்து பெண்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் பாக்யா. இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பாக்கியாவிற்கு எப்படி ஆப்பு வைப்பது என்று கோபி அலைந்து கொண்டிருக்கிறார். இதனை கண்டு கொள்ளாமல் வீட்டில் மகள் மருமகள் என பாக்யா அவரின் வாழ்க்கையை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவா இருந்து வரும் பாக்கியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுசித்ரா, இனியாவுடன் இணைந்து காவாலா பாடலுக்கு ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வர அதனை பார்த்த ரசிகர்கள் பலரும் மகளை விட அம்மா நல்லா பண்றாங்க என கூறி வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Nehah Rajesh இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@_nehah_official_)