நடிகர் சூப்பர் ஸ்டார் நடிப்பில் நெல்சன் இயக்கி வரும் திரைப்படம் ஜெயிலர். இந்த படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான காவலா  சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டது என்றே சொல்லாம். ஏனெனில் தமன்னாவின் குத்தாட்டம் ரசிகர்கள் வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 28ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அனுமதி சீட்டுகள் அனைத்தும் 15 நொடிகளில் விற்றுத் தீர்ந்துள்ளன. இப்படத்திற்கான 1,000 அனுமதி சீட்டு இலவசமாகவும், ஒருவருக்கு 2 எனவும் சன்பிக்சர்ஸ் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.