உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் அதிகம் பேசப்பட்ட ட்விட்டர் கணக்குகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி  ஜூன் மாதத்தில் ட்விட்டரில் அதிகம் விவாதிக்கப்பட்ட முதல் 10 இந்திய கணக்குகளில் நடிகர் விஜய்யும் ஒருவராக உள்ளார். ட்விட்டரில் அதிகம் பேசப்பட்டவராக பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். உ.பி. முதலவர் யோகி, கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆகியோர் 2 மற்றும் 3வது இடங்களில் உள்ளனர்.

இந்திய கால்பந்து வீரர் சுனில் சேத்ரி நான்காவது இடத்திலும், யூடியூபர் ஃபுக்ரா இன்சான் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். இதில் ராகுல் காந்தி கடைசி இடத்தை பிடித்துள்ளார். நடிகர் விஜய் 7வது இடத்தில் உள்ளார். இந்நிலையில் தமிழ்நாட்டில் இருந்து நடிகர் விஜய் மட்டுமே இந்த டாப் 10ல் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.