நடிகர் சிவகார்த்திகேயன்  மண்டேலா திரைப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான “மாவீரன்” படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாரானது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, டைரக்டர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். விது அய்யனார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த திரைப்படம் ஜூலை 14 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பும் நெட்டிசன்கள் இடையே கலவையான விமர்சனங்களையும் பெற்றது. மாவீரன் படம் வெளியாகி 8 நாட்களில் ரூபாய் 63 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.