காமெடி நடிகராகவும் ஒருசில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து கலக்கி வருபவர் யோகி பாபு.  இப்படி சினிமாவில் படு பிஸியாக நடித்துக் கொண்டு வரும் யோகிபாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஒரு படத்தில் ஹீரோவாக நடித்தால் மூன்று முதல் ஐந்து கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்.

.காமெடியனாக நடிக்க ஒன்று முதல் இரண்டு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம்; இவருக்கு சொந்தமாக சென்னையில் ஒரு வீடு மற்றும் இரண்டு கார்கள் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. சொந்த ஊர் ஆரனியிலும் சில வீடுகள் மற்றும் நிலங்கள் இருக்கிறது. இவருடைய ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 40 கோடி முதல் 70 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்கான ஆதாரங்கள் எதுவும் வெளியாகவில்லை.